ஶ்ரீலங்கன் விமான சேவை இடைக்கால நிர்வாக சபைக்கு கைமாற்றம்!
Tuesday, January 9th, 2018
ஶ்ரீலங்கன் விமான சேவையை புதிய இடைக்கால நிர்வாக சபை பொறுப்பேற்க உள்ளதாகவும் இந்த சபையின் தலைவராக முதலீட்டுசபையின் முன்னாள் தலைவரான திலான் விஜேசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாகஅறிவித்தவுடன் புதிய அதிகாரிகள் செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய பணிப்பாளர் சபையிலுள்ள ஹரேந்திர கே.பால பட்டபெந்தி தவிர்ந்த ஏனைய 6 பேரும் இராஜினாமாகடிதங்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட்டுக்கோட்டை வயல் கிணற்றினுள் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!
உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
துண்டு விழும் தொகையை குறைக்கும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது - திறைசேரி செயலாளர் தெரிவிப்பு!
|
|
|


