செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு நல்லூரில் மாபெரும் சிரமதானம்!
Sunday, November 26th, 2017
நல்லூர் மகாத்மா ஜீ சனசமூக நிலைய இளைஞர்களால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றுகாலைமுதல் திருநெல்வேலி கலாசாலை வீதி ஒழுங்கை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சிரமதான பணிகளை அப்பகுதியின் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பெரியவர்கள் என பலர் கலந்துகொண்டு முன்னெடுத்திருந்தனர்.
இந்த சிரமதான நிகழ்வை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சிரமதான பணிகளை ஆரம்பித்து வைத்ததுவைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் எவருக்கும் அனுமதி கிடையாது!
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சதி - அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு!
|
|
|
சேதனப் பசளையை பயன்படுத்தி பெரும்போக பயிர்ச்செய்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்த திணைக்களம் அறிவிப்ப...
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...
“நிபா” வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கை - சுகா...








