நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சதி – அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!
Monday, February 13th, 2023
தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிக்குள் இவ்வாறான சாதிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவலை வெளியாகியுள்ளது என கூறியுள்ளார்.
ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும், இரண்டு மூன்று நாட்களாக மக்கள் வரிசையில் காத்திருந்ததையும் சிலர் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரசபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் செலவுகளையும் நிர்வகிக்க வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் வனம் அமைக்கத் திட்டம்!
கட்டார் முயற்சி - அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் விடுதலை செய்தது ஹமாஸ்!
பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் ந...
|
|
|


