மின்தடை தொடர்பான அறிவித்தல்!

Saturday, November 25th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களிலும் கிளிநொச்சி பிரதேசங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சாரசபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை யாழ்.பிரதேசத்தில் நுணாவில், கைதடி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன்தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவுவீதி, அறுகுவெளி, பனைவள ஆராய்ச்சி நிலையம், கைதடி யுனைற் ரெட் மோட்டர்ஸ், கைதடி வடமாகாணசபை அலுவலகம், வறாத்துப்பளை, புனித நகர், திக்கிரி, கற்கோவளம், மாதனை, நெல்லண்டை, பருத்தித்துறை வெளிச்சவீடு, சிவப்பிரகாசம், 3 ஆம் குறுக்குத்தெரு பிரதேசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை கிளிநொச்சிப் பிரதேசத்தில் முள்ளியவளை ஒரு பகுதியிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

Related posts:

இளவரசரின் இலங்கை பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த உதவும் - பிரித்தானியா!
டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை – திங்களன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் தீர்மானிக்கும் ...
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி இன்று முன்னிரவு பதவியேற்பு - நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக...