பாரதப் பிரதமராக நரேந்திர மோடி இன்று முன்னிரவு பதவியேற்பு – நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்தார்!
Sunday, June 9th, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு சென்றடைந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி இந்தியா நோக்கி பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி பயணித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாரதப் பிரதமராக நரேந்திர மோடி இன்று 3 ஆவது முறையாக பதவியேற்கவுள்ளார்..
அதன்படி, மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர்த், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் இன்று விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000 க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் டெல்லி பொலிஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106