இளவரசரின் இலங்கை பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த உதவும் – பிரித்தானியா!

Monday, January 15th, 2018

பிரித்தானிய இளவரசரின் இலங்கை பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த உதவும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் பிரித்தானிய இளவரசர் மற்றும் அவரது பாரியார் ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ஆம் திகதிவரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரித்தானிய உயரிஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இவர்கள் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின வைபவத்தில் பிரித்தானிய மகாராணி சார்பில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது பிரித்தானிய இளவரசர் கொழும்புக்கு மட்டுமல்லாது, இலங்கையின் ஏனைய சில பாகங்களுக்கும் பயணம் செய்ய உள்ளார்.

தமது பயணத்தில் விருது வழங்கும் நிகழ்வொன்றில் அவர்கள் பங்கேற்பதுடன், இலங்கையின் இளைஞர் குழுக்களையும் சந்திக்க உள்ளனர்.பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு லண்டல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ளது.அதற்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இந்தப் பயணம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106