வழமைக்கு திரும்பிய வடக்கின் ரயில் சேவை!
Friday, November 17th, 2017
வடபகுதிக்கான ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த தண்டவாள குறைபாடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
ரயில் சேவைகள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த தண்டவாளம் திருத்தப்பட்டுள்ளதால் இன்று(17) காலை கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கான கடுகதி ரயில் வண்டி பயணத்தைத் தொடங்கியதாக கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் இன்று(17) காலை அறிவித்தார்.
மதவாச்சிக்கும், பரசன்-கஸ்வௌ பகுதிக்கும் இடையில் ரயில் வண்டி தண்டவாளத்தை விட்டு விலகியதால், ரயில் சேவைகள் அனுராதபுரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரியபுலவு மகா வித்தியாலய சம்பவம்: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என பெற்றோ...
புதிய ஆளுநர்கள் நியமனம்!
திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் - சைவ மகா சபை கடும் கண்டனம்!
|
|
|


