வெள்ளியன்று திரைக்குவரும் தீப்பந்தம் திரைப்படம்!
Thursday, May 29th, 2025
ஈழத்து கலைஞர்களின் முழுமையன பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட முழு நீள திரைப்படமான தீப்பந்தம் திரைப்படம் நாளையதினம் அதிதிகள் பார்வைக்காக திரையிடப்படுவதுடன் நாளைமறுதினம் (31.05.2025) மாலை ராஜா திரை அரங்கில் திரையிடப்படவுள்ளதாகவுன் குறித்த திரைப்படத்தின் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வறு தெரிவித்த படக்குழுவினர் மேலும் கூறுகையில் –
“மூட்டி வைத்த தீயே
எங்கு போனாய் நீயே
தீட்டி வைத்த கனவே
தோற்கலாமோ நாமே” என்ற கருவை உயிரோட்டமாக தாங்கிய முழு நீளக் கதையுடன் நகரும் குறித்த திரைப்படமானது எமது ஈழத்து கலைஞர்களது முழுமையாக தரிக்கப்பட்ட திரைப்படமாகும்.
அத்துடன் எமது தயரிப்பில் உருவாகும் மூன்றாவது திரைப்படமாகவும் இது அமைகின்றது.
எமது ஈழத்து கலைஞர்களின் முயற்சிக்கு கடந்த இரண்டு திரைப்படங்களுக்கும் அதிகளவான வரவேற்பு கிடைத்து எமது முயற்சிக்கு பெரு வெற்றியை ஈட்டித்தந்தது.
அதேபோன்று நாளைமறுதினம் வைகாசி 31 முதல் இலங்கையில் ராஜா திரையரங்கில் மாலை 6.00 மணிக்கு தீப்பந்தம் திரையேற்றப்பவுள்ளது.
அத்துடன் புலம்பெயர்ந்த நடுகளிலும் 31.05.2025 அன்று திரையிடப்படவுள்ளதாகவும் குறித்த படக்குழு தெரிவித்துள்ளதுடன் படத்தை பார்வையிட்டு தமது முயற்சியை வெற்றிபெற செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106