அராலியில் மாணவனின் சடலம் மீட்பு
Wednesday, May 25th, 2016
அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த, அராலி தெற்கைச் சேர்ந்த ஜெ.ஜெசிந்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்மாணவன், கடந்த 23 ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடி பயிற்சிநெறி!
வாரத்தில் மூன்று தடவை யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை - வர்த்தக...
பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் ய...
|
|
|


