ஆயுதம் இருப்பதாக சந்தேகம் : புலோலியில் இராணுவம் தேடுதல் நடவடிக்கை!
Monday, November 13th, 2017
வடமராட்சி – புலோலி பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இராணுவத்தினர் கனரக வாகனங்கள் சகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
புலோலி உபயகதிர்காமம் பகுதியில் புலிகளின் கடற்புலித் தளம் இருந்த இடத்திலேயே குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
முன்னதாக, புலிகளின் கடற்படைக்கு சொந்தமான கடற்புறா தளம் இருந்து இந்த பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிக்கடையில் கனரக வாகஙக்களின் உதவியுடன் பெருந்தொகையான இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய நாடாளுமன்ற கூட்டத்தின்போது புதிய அரசின் கொள்கை அறிக்கையை அறிவிப்பார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப...
தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் வடக்கிற்கு பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவி!
|
|
|


