பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளதாக – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
Tuesday, September 7th, 2021
பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாக பிரித்தானியா குறித்த தீர்மன்றத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரில் இணைய வழியில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நியூசிலாந்தில் இடம்போற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ள அவர் இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106