அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குளிரூட்டியில் 9 சடலங்கள்!
Wednesday, November 1st, 2017
ஜப்பானின் ஸாமா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 மனிதத் தலைகள் உள்ளிட்ட 9 சடலங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நேற்று (30) ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பெட்டிக்குள் 2 மனிதத் தலைகள் இருந்துள்ளன.
இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட போது அங்கு 7 சடலங்கள் இருந்துள்ளன. சடலங்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிஸார் அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி (27) என்பவரை கைது செய்துள்ளனர்.
எனினும், வீட்டில் இருந்த சடலங்கள் தொடர்பில் தெளிவான காரணங்களை பொலிஸார் வௌியிடவில்லை.
Related posts:
ஜெயலலிதா உடல் நிலை குறித்து உரிய விவரங்களை 6 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற...
பொதுநலவாய போட்டிகளில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பர்!
இஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி!
|
|
|


