ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புட்டினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு – ரஸ்ய அதிகாரிகள் தெரிவிப்பு!

Thursday, May 4th, 2023

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொலை செய்வதற்கு உக்ரைன் மேற்கொண்ட சதிமுயற்சியை முறியடித்துள்ளதாக  ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அனுப்பிய இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக   ரஸ்யா தெரிவித்துள்ளது.

கிரம்ளினை நோக்கி இரண்டு ஆளில்லா விமானங்கள் அனுப்ப்பட்டன அவை செயல் இழக்கச்செய்யப்பட்டுள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது

புட்டினிற்கு காயங்கள் ஏற்படவில்லை – கிரெம்ளினிற்கு சேதங்கள் ஏற்படவில்லை எனவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.

இதனை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக தெரிவித்துள்ள ரஸ்யா தனக்கு பதில் தாக்குதலிற்கான உரிமையுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மே 9ஆம் திகதி வெற்றி தினத்திற்கு முன்னதாக இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத முயற்சியாக படுகொலை முயற்சியாக கருதுவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. எனினும் இதற்கான ஆதாரங்கள் எவற்றையும் ரஸ்யா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106