சவுதி அரேபியாவில் பாரிய விபத்து – இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம்!
Thursday, March 7th, 2019
சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 4 அமெரிக்க படையினர் மற்றும் இலங்கையர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Khubari Al-Awazem பகுதியில் அமெரிக்க படையினர் ஓட்டிய இராணுவ வாகனம், ட்ரக் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 4 அமெரிக்க படையினரும் பாரிய காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இராணுவ வீரர்கள், அமெரிக்க தளமாக கொண்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இலங்கையர்களும் Jahra வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Related posts:
உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதை இன்று திறந்துவைப்பு!
புலம்பெயர்ந்துள்ள 1443 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!
குடாநாட்டின் பல பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கல் : பதற்றத்தில் மக்கள்!
|
|
|


