இம்மாத இறுதியில் புதிய வாக்காளர் பட்டியல் நடைமுறைக்கு வரும்!
Thursday, September 14th, 2017
2017ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் இம்மாத இறுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் இறுதிக்கட்ட திருத்தப் பணிகள் கடந்த ஆறாம் திகதியுடன் முடிவடைந்துள்ளன. தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர் சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மாத இறுதியில் 2017ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.எதிர்வரும் 30ம் திகதி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்கள் அந்தந்த மாவட்டங்களின் வாக்காளர் பெயர்ப்பட்டியலை வௌியிடவுள்ளனர்.அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Related posts:
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நி...
இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஜூன் மாதத்துக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்...
|
|
|


