இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Tuesday, November 15th, 2022
நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
குறிப்பாக தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106