எதிர்வரும் வாரத்தில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிலைப்பாடு வெளியிடப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
Sunday, August 20th, 2017
புதிய அரயசில் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் வெளியிட முடியும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.இந்த தேர்தல் முறையை புறந்தள்ளுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் முயற்சித்தனர்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முயற்சியால் தொகுதிவாரி தேர்தல் முறை கொண்டுவரப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் வாரத்தில் புதிய தேர்தல் முறை குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது குறிப்பிட்டார்.
Related posts:
புகையிரத ஊழியர்களும் வேலைநிறுத்த எச்சரிக்கை!
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
இந்தியா - இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் காஞ்சன விஜேசே...
|
|
|


