மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அரச முகாமைத்துவ சேவையில் இவ் வருடம் இணைப்பு!
Monday, July 17th, 2017
அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் எனவும் இதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். இரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு முகாமைத்துவ சேவையில் நிலவும் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று அரச கூட்டு சேவை பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி கமகே தெரிவித்தார்.
Related posts:
கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு ...
பெரும்போகம் - மன்னார் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை – மன்னார் மாவ...
இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைந்து செயற்படுத்த விசேட குழு - ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
|
|
|


