பெரும்போகம் – மன்னார் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை – மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்!
Saturday, October 16th, 2021
மன்னார் மாவட்டத்தில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தில் 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது கட்டுக்கரை குளத்தில் 7 அடி 8 அங்குலம் நீர் காணப்படுகின்றது. மேலும் சிறிய குளங்களும் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.
அதன் அடிப்படையில் முதலாவது நீர் விநியோகம் இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் இறுதி திகதியாக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதன்போது கால்நடை பராமரிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதன் அடிப்படையில் கால் நடைகளை இம்முறை புல்லறுத்தான் கண்டல், தெருவெளி, தேத்தாவடி போன்ற இடங்களில் பட்டி அடைத்து பராமரிக்கும் படி கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குறித்த பகுதிகளில் கால்நடைகளை பராமறிப்பவர்களை ஒழுங்கு படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இம்முறை ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்தல் என்ற சிந்தனையின் அடிப்படையில் இயற்கை பசளையின் மூலம் குறித்த பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
சுமார் 60 வருடங்களின் பின்னர் முதல் முதலாக விவசாயிகள் இயற்கை பசளை மூலம் விவசாய செய்கையை மேற்கொள்வதாகவும், இது ஒரு சவாலாக அமையும் எனவும், குறித்த சவாலுக்கு முகம்கொடுத்து இயற்கை பசளை மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பசளையை பெற்றுக்கொள்ள வங்கி கடன் வழங்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் யூரியா உரத்தை சிறிய பகுதியாவது பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், பயிர்ச் செய்கையின் அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106