கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, July 9th, 2017

எமது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படும் அதேவேளை அவற்றை கட்டியெழுப்பவது தொடர்பில் துறைசார்ந்த தரப்பினர் அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (9) நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழியில் மட்டும் தங்கியிருக்காது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதிலும் தங்கியிருக்கின்றது. அந்தவகையில் கடந்தகாலங்களில் எத்தனையோ இடர்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் நாம் முகம்கொடுத்து எமது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் இவ்வாறான எமது விழுமியங்களை பாதுகாக்கும் அதேவேளை அவற்றை வளர்த்தெடுப்பதிலும் முன்னேற்றுவதிலும் தமது பாரிய பொறுப்புக்களை உணர்ந்தவர்களாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக, சமூக விரோத செயற்பாடுகள் போதைவஸ்து பாவனை உள்ளிட்ட சமூக சீரழிவுகளிலிருந்து இன்றுள்ள இளைய சமூகத்தினரையும் எதிர்கால சமூகத்தினரையும் பாதுகாக்கும் தமது கடமைகளை உணர்ந்து செயற்படவேண்டும்.  இதில் யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரக்கம் பாரிய பங்களிப்பு உண்டு என்பதுடன் அவர்களும் இதை உணர்ந்த செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வை. தவநாதன் உடனிருந்தார்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!
காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
சட்டத் திருத்தங்கள் முழுமையாக அமுல்ப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் ஆதங...

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!
வடபகுதியில் அத்துமீறிய கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் - செயலாளர் நாயகம்!
மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ் தே...