இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம்!
Tuesday, May 30th, 2017
வெள்ளம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி முதல் இவ்வாறு நாள்தோறும் இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாட்டு முகாமையாளர் பீ.எச்.ஆர்.டீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கலாவனை, கொடகவல, இரத்தினபுரி போன்ற டிப்போக்களில் அதிகளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.காலி, மாத்தறை, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் டிப்போக்களின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
பரீட்சை சான்றிதழ்களை இணையளத்தினூடாக பெற்றுக்கொள்ளும் முறை!
இம்மாதம் 21 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்!
இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்தி...
|
|
|


