குற்றமிழைக்கும் அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வண்டும் – அமைச்சர் மகிந்த அமரவீர!
Tuesday, May 23rd, 2017
குற்றம் இழைக்கும் அமைச்சர்கள், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்ம் என மீன்பிடித்துறை அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் மக்களுக்காகச் சேவையாற்ற முடியாத அமைச்சர்கள் இந்தப் பதவிகளை வகிப்பதில் எவ்வித பயனும் கிடையாது. நாட்டு மக்களின் சொத்துக்கள் களவாடப்படுமானால் அல்லது மோசடி செய்யப்படுமானால் அவ்வாறானவர்கள் பதவியில் இருக்கக் கூடாது.
நாம் பலவீனமாகச் செயற்பட்டால் உரிய முறையில் கடமையாற்றத் தவறினால் எம்மைப் பதவியிலிருந்து நீக்குவதில் பிரச்சினை கிடையாது. எந்தவொரு அமைச்சுப் பதவி கொடுக்கப்படாலும் அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட நான் தயார் – என்றார்
Related posts:
எரிவாயுவுடன் கூடிய கப்பல் இலங்கை வந்தடைந்தது - நாளைமுதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் - லிட்...
ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம்!
‘மித்ரசக்தி’ - இராணுவப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை வந்தடைந்த இந்திய படையினர்!
|
|
|


