ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம்!
Friday, January 27th, 2023
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லன்ட் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின வைபவத்திலும் கலந்து கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க பெப்ரவரி 01 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் பெப்ரவரி 05ம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதாகவும் அதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106