‘மித்ரசக்தி’ – இராணுவப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை வந்தடைந்த இந்திய படையினர்!

Tuesday, August 13th, 2024

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மித்ரசக்தி போர் பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை மாதுரு ஒயா பிரதேசத்தில் நடத்துவதற்குத் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்கள் நேற்று (12) மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர்

இந்திய இராணுவ படையினர் காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர்.

இப்போர் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும், 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும், 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர்.

10 ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும், இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கிடையே அனுபவப் பகிர்வு மற்றும் நட்புறவு மூலம் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பூரண மேற்பார்வையில் இந்த இராணுவப் பயிற்சி நடைபெறுவதுடன், இந்த இராணுவ பயிற்சியின் பணிப்பாளராக 59ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம செயற்படுகின்றார்.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106