யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் பத்துக் குவிவாடிகளைப் பொருத்த நடவடிக்கை
Friday, May 5th, 2017
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் பத்துக் குவிவாடிகளைப் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான வீதீகளின் திருப்பு முனைகளில் குவிவாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வாறு பொருத்தப்பட்ட குவிவாடிகளில் இரு குவி வாடிகள் இனம் தெரியாத விஷமிகளால் அடித்து உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்துவதற்காகப் பத்துக் குவிவாடிகள் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டி!
கொரோனா வைரஸ் : இன்று விசேட கலந்துரையாடல்!
சிறப்பாக நடைபெற்ற வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு !
|
|
|


