அதிகாரத்தை அடைய இது நல்ல வாய்ப்பு: மே தின உரையில் ஜே.வி.பி.யின் தலைவர்

Thursday, May 4th, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூன்று முக்கிய அரசியல் முகாம்களிலும் தற்போது ஏற்படுள்ள ஒரு பின்னடைவு  நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)  தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை நாம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தங்க வாய்ப்பை அளிதுள்ளதாகவும் தேரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் மே தின உரையில் இவாறு   தெரிவித்த அதன் தலைவர் அனுர குமார திசனயாக்க ராஜபக்ஷ தரப்பு ஒரு வளர்ந்துவரும் சக்தி அல்ல எனவும் ,மஹிந்த ராஜபக்ஷவையே நம்பியுள்ள அவரின் ஆதரவாளர்களிடம்  ஆக்கபூர்வமான அரசியல் முழக்கங்கள் எதுவும் இல்லை எனவும் கூறினார்.

புலிகள் அமைப்பு மீண்டும் தலை தூக்குகிறது என்பதை மட்டுமே அவர்களால் கூற முடியும். ஆனால் ஜே.வி.பி தீவிரமான அரசியலில் இருக்கும் வரை நாட்டில் இனி எந்தவொரு இன மோதலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவி சிறிசேனவின்  அரசியல் வருங்காலமும் நிச்சயமற்றதாகவே  உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஸ்ரீ.ல.சு.க. கட்சியை பிளவுபடுத்துவதன் மூலம் பெரும் பினடைவை சந்திக்கிறார்அவர் கட்சியின் தலைவர் என்றாலும்  ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்களுக்கு  அவர் தலைவர் அல்ல.எனவும்  அனுர குமார திசனயாக்க தனது உரையில் தெரவித்தார்.

மக்கள் ஆதரவற்ற, மக்களால் தெரிவுசெய்யப்படாத  ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு உறுதியான அரசியல் எதிர்காலம் இல்லை, அவர் மஹிந்த சார்பு, மஹிந்த-எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு   இடையில் நடைபெற்ற 2015 தேர்தலுக்கான ஒரு தயாரிப்பு ஆகும். மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள்  விரும்பியபோது, ரணில் மோசடிகளில் ஈடுபட்டவர்.

ஆக இந்த அரசியல் வெற்றிடத்தை  மக்கள் ஆதரவாக்கி  அதிகாரத்தை கைப்பற்றும்  வலு ஜே.வி.பி. யிடம்  மட்டுமே உள்ளது எனவும் அனுர குமார திசனயாக்க தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106