தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் – சிஐடி விசாரணை!

Thursday, January 19th, 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பாக இருவரும் காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறான சூழலிலேயே தேர்தல் தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு நேற்று (18) இரவு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106