கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!
Tuesday, May 7th, 2019
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோரிடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் அது தொடர்பில் தமக்கு விளக்கமளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னரே அவற்றை இரண்டாம் தவணைக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் வருகை நேற்றைய முதலாம் நாள் குறைவாக இருந்துள்ளது.
பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் விடுவது குறித்து தம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உரிய காலத்துக்கு பாடசாலையை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - அமைச்சர் பைசர் முஸ்தபா!
வறுமையான குடும்பங்களில் இருந்துவரும் மாணவர்களே சாதிக்கதுடிக்கின்றனர் - யாழ்ப்பாண மேலதிக மாவட்ட செயலா...
|
|
|


