தகவல் அறியும் சட்டமூலம்: ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது!
Tuesday, May 3rd, 2016
தகவல் அறியும் சட்டமூலத்தின் ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள அரசியலமைப்பிற்கு முரணான சரத்துக்கள் திருத்தப்படாவிடின் தகவல் அறியும் சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட நேரிடும் என இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் சாதாரண பெரும்பான்மையால் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பலத்த காற்றுடன் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!
"பிரஜா சக்தி" குழு மக்களால் துரத்தப்படும் - சபை ஒருபோதும் ஒத்துழைக்காது என வேலணை பிரதேச ச...
|
|
|


