இலங்கை கடற்படையின் கடந்த வருட வருமானம் 226 கோடி !
Wednesday, January 4th, 2017
2016ஆம் ஆண்டில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இதற்காக 2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் 6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை கூறியுள்ளது.
எவன்கார்ட் தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் பருவ நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட வருமானம் அரசின் ஒன்றிணைந்த நிதியத்திற்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

Related posts:
யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!
சுகாதார மேம்பாடுகளை இரட்டிப்பாக அதிகரிக்கும் போதே கொவிட் தொற்றுவீதம் குறையும் - மருத்துவர் யமுனாநந...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலைகளை சுயாதீனமாக தீர்மானிக்க முடியும் - முன்னாள் அமைச்சர் ...
|
|
|
பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவ...
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் - சுகாதார அமைச்சர...
விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவைய...


