நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நம்பிக்கை!
Tuesday, December 13th, 2022
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம் (11) கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சீனாவினால் இலங்கைக்கு வழங்கக்கடும் சுகாதார ஒத்துழைப்புகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே, 42 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உண்டு - ஊர்காவற்றுறை பிரதேச ...
சிறுவர் தினத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்...
கலப்படமான எரிபொருள் விவகாரம் - எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!
|
|
|


