1 கோடியே 60 இலட்சம் பேர் இலத்திரனியல் அடையாள அட்டைக்கு தகுதி!
Tuesday, January 3rd, 2017
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெறவுள்ளனர் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளினதும் மரபணு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் இதில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பிரஜைகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு தகுதி பெறுவோரின் எண்ணிக்கை 1 கோடியே 60 இலட்சம் என்றும் கூறியுள்ளார்.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கான சட்டவிதிகளை சட்டமா அதிபர் திணைக்களம் தயாரித்துள்ளது.
அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அனுமதி இம்மாதம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி சில வாரங்களில் பூர்த்தி - உள்நாட்டலுவல்கள் அமைச்சு!
சட்டத்தில் இடமில்லை : ஆகவே ஆதரவளிக்க முடியாதுள்ளது - முதல்வருக்கான இல்லம் தொடர்பில் றெமீடியஸ்!
அஸ்வெசும நலன்புரி திட்டம் - முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர்களுக்கான நிலுவைத் தொகை இன்றுமுதல்...
|
|
|
பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவட...
நெல் கொள்வனவு தொடர்பில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு...
சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம் – இளங்குமரன் MP அறியாமல் புலம்புகின்ற...


