நெல் கொள்வனவு தொடர்பில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, September 11th, 2022

நெல் கொள்வனவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஜனாதிபதி தலைமையில் நாளைமறுதினம் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்வனவுக்கு அவசியமான பணம் அரச வங்கிகள் ஊடாக வழங்கப்படாமல் தாமதமடைந்துள்ளமைக்கு இதன்போது தீர்வை பெற்று கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர், வங்கிகளின் பிரதானிகளுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அவர்களை இதனை புறக்கணிப்பதாக தெரியவருகிறது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாளை மீண்டும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய் கிழமை கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106