அமெரிக்க டொலரின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கும்!
Monday, November 28th, 2016
நாட்டின் சீரற்ற நிதி முகாமைத்துவம் காரணமாக இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பந்துல, ஒரு வார காலத்திற்குள் டொலரின் பெறுமதியை 130 வாக குறைப்பதாக நிதியமைச்சர் ஒரு முறை கூறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தற்போது டொலர் ஒன்றின் பெறுமதி 151 ரூபா, இன்னும் மூன்று மாதங்களில் அது 160 ரூபாவாக அதிகரிக்கும்.
டொலரின் விலையை குறைப்பதற்கா கையிருப்பதில் இருந்து 8.2 பில்லியன் ரூபாவில் .3.2 பில்லியன் ரூபா சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
நோயாளர்களின் நலன்கருதி சாவகச்சேரி மருத்துவமனையில் அலைபேசியைப் பயன்படுத்த பணியாளர்களுக்குக் கட்டுப்பா...
ஏப்ரல் 21 தாக்குதலுடன் 125 பேருக்கு தொடர்பு: வெளியானது இரகசிய கடிதம்!
தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் - க...
|
|
|


