தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொவிட்!
Thursday, June 24th, 2021
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுறுதியான ‘தோர்’ என்ற ஆண் சிங்கம் வசித்துவந்த பகுதியில் இருந்த ‘ஷீனா’ என்ற பெண் சிங்கத்துக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
ராகம மருத்துவ பீடத்திற்கு அனுப்பப்பட்ட 12 வயதான குறித்த பெண் சிங்கத்தின் மாதிரிகள் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன
அதன்போது, குறித்த சிங்கத்துக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரச கால்நடை மருத்துவ சங்கத்தின் செயலாளர் நுவன் ஹேவாகமகே தெரிவித்துள்ளார்..
அத்துடன் தொற்றுதியான சிங்கத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
இதேவேளை, முன்னதாக கொவிட் தொற்றுக்குள்ளான தோர் தற்போது குணமடைந்து வருவதாக மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தில் சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு நகர சங்கீர்த்தனமும் ...
பாடசாலை மாணவியை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு!
பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - காலநிலை அவதான நிலையம்!
|
|
|


