தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, November 14th, 2021
பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு மாற்றங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர வினாத்தாள்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சுற்றறிக்கை எதிர்வரும் காலத்தில் வெளியாகுமென பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சோள உற்பத்தி அதிகரிப்பு!
விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!
மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!
|
|
|


