இந்தியப் பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது!
Friday, November 25th, 2016
சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜையொருவர் யாழ். குருநகர் பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை(24) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து 43 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடமிருந்து ஒரு தொகை துணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்!
ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!
தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்...
|
|
|


