வவுனியாவில் சொகுசு பேருந்து விபத்து!
Saturday, November 19th, 2016
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த தனியார் சொகுசு பேருந்து, வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று(19) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மழை பெய்து கொண்டிருந்த போது அதிக வேகம் காரணமாக வீதியைவிட்டு விலகியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.எனினும் பேருந்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதி...
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் - அமெரிக்கா எச்சரிக்கை!
|
|
|


