மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!

Saturday, December 11th, 2021

இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ்  நட்ராஜ் மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்.தமிழ் சங்க தலைவர் லலீசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினர்.

இதேவேளை , மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாளான இன்று யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் வட்டுக்கோட்டை முதலாம் ஒழுங்கையில் யாழ்.இந்திய நட்புறவுப் பேரவையின் தலைவர் சிதம்பரம் மோகனினால் நிர்மாணிக்கப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையை மறவன்புலவு சச்சிதானந்தன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், இந்து சமய மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

90 மில்லியன் ரூபாயை முறைகேடு - இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குற்றப்புலனாய்வா...
நாளையதினம் நாடு முழுவதும் "கிராமத்துடனான உரையாடல் - வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம்...
உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை அதிக...

தனிநபர் சுயவிருப்பங்களுக்காக கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் மக்களுக்கான விமோசனங்கள் ...
பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரச காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொட...
வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள 100 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!