வடக்கின் புதிய பிரதி அவைத்தலைவரானார் கமலேஸ்வரன்!
Thursday, October 27th, 2016
வடமகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், வாக்கெடுப்பு ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வட மாகாண சபையின் முதலாவது பிரதித் அவைத்தலைவராக (பிரதித் தவிசாளர்) பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது மறைவையடுத்து, வடமாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி வெற்றிடமாகியது.
அதனையடுத்து, வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாகி நடைபெற்ற போது, புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts:
எதிர்வரும் 25ஆம் திகதியுடன் கலைக்கப்படுகிறது வடக்கு மாகாணசபை!
மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகளே காணப்படுகிறன - பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென மாவ...
இராஜதந்திர உறவுகளையும் எமது வாழ்வாதாரத்!தையும் பாதிக்காத வகையில் - இந்திய கடற்றொழிலாளர் விகாரத்திற்க...
|
|
|


