மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகளே காணப்படுகிறன – பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென மாவட்ட கொரோனா செயலணி வலியுறுத்து!
Friday, May 7th, 2021
யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட கொரோனா செயலணி வலியுறுத்தியுள்ளது.
யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட செய்தியிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் “யாழ். மாவட்டத்தில் நேற்று மட்டும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ஆயிரத்து 688 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி யுள்ளார்கள் என்பதுடன் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 261 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டும் உள்ளன.
அதேநேரம் தற்போது, பொலிஸார் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின் அதேவேளை வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில முன்னேற்ற நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக ஏற்கனவே கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இருந்த இரண்டு சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் சில சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றும் கிளிநொச்சியிலும் 230 கட்டில்களுடன் ஒரு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மருத்துவமனைகளையும் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவசர சிகிச்சைக்குரிய கட்டில்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எனவே, அதனையும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் எடுத்துள்ளார்கள்.
எனவே, மட்டுப்படுத்தப்பட் வைத்திய வசதிகள் காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதிய வீரியம்மிக்க வைரஸ் பரவல் நாட்டில் இருக்கின்றமையினால் சுகாதார நடைமுறைகளைப் பொதுமக்கள் இறுக்கமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106