டில்ருக்ஸி இடத்தில் புதிய பணிப்பாளர்!
Thursday, October 20th, 2016
இலஞ்சம் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த டில்ருக்ஸி டயஸ் பண்டாரநாயக்க பதவியை ராஜினாமா செய்துகொண்டமையினை ஜனதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து குறித்த ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக சுனேத்ரா ஜயசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி தனது ராஜினாமா கடிதத்தை டில்ருக்ஸி ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். இருப்பினும் அந்த நேரத்தில் ஜனாதிபதி பிரிக்ஸ் – பிக்ஸ்டெக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றிருந்தார்.எனினும் சுனேத்ரா இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜனாதிபதி நாளை மறுதினம் யாழ்ப்பாணம் விஜயம்!
தொடருந்து சேவைக்கான மறுசீரமைப்பை துரிதப்படுத்த நடவடிக்கை!
யாழ் மாநகர கழிவகற்றல் பிரச்சினைக்கு திருப்திகரமான நடவடிக்கை இல்லை - ஈ.பி.டி.பி. கூட்டத்தில் விசனம்
|
|
|


