ஊர்காவற்றுறை மைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி -கழகங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
Tuesday, January 31st, 2017
ஊர்காவற்றுறைப் பகுதியில் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பொதுவிளையாட்டு மைதான புனரமைப்பில் பாரிய மோசடி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டி கழக அங்கத்தவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் ஊர்காவற்றை பிரதேச விளையாட்டுக் கழகங்களின் அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை – பண்ணைவீதியில் அமைந்துள்ள குறித்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் ஊர்காவற்றுறைப் பகுதி விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மைதானப் புனரமைப்பு தரமற்றது, மைதானமா சுடுகாடா, ஊர்காவற்றுறை அபிவிருத்தியில் அரச அதிகாரிகளே அக்கறை காட்டுங்கள், தரமற்ற கிரவலை அகற்றி தரமான முதல்தர கிரவலைக் கொண்டு மீள் புனரமைக்கவேண்டும், போன்ற கோசங்களையும், பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விளையாட்டு மைதானம் கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் முடிக்கப்படவேண்டிய நிலையில் மேலதிகமாக ஒருமாதம் ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை சரியான நிலையில் புனரமைக்கப்படவில்லை.
விளையாட்டு அமைச்சின் நிதி பிரதேசசெயலகம் ஊடாக பிரதேசசபைக்கு வழங்கப்பட்ட நிலையில் பிரதேச சபையூடாக ஒப்பந்தம் வழங்கப்பட்ட போதும் பிரதேச சபை, பிரதேச செயலரின் அக்கறையீனமே குறித்த விளையாட்டு மைதானப் புனரமைப்பு இவ்வாறு தோல்வியடையக் காரணம் எனத் குற்றம் சாட்டுகின்றனர்.
தரமற்ற கற்களுடனான கிரவல் போடப்பட்டிருப்பதால் குறித்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபடமுடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, விளையாட்டு மைதானம் புனரமைப்பென்ற பெயரில் 8 மாதங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுவதால் ஊர்காவற்றுறைப் பகுதியில் உள்ள பல விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு மைதானம் இன்றி இருப்பதாகவும், இம் மைதானத்தை விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருபது இலட்சம் ரூபாவுக்கு புனரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் மைதானத்தில் மண் பரவப்பட்டதைத் தவிர எதுவுமே செய்யப்பட்டடிருக்கவில்லை. மேலும், கடந்த 25 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு மைதானத்தை நேரில் சென்று மேற்பார்வை செய்த வடக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த விளையாட்டு மைதானப் புனரமைப்புக் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், உரிய முறைப்படி புனரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியதுடன், மைதானத்துக்கு பரவப்பட்ட 3 ஆம் தர கிரவல் அகற்றப்பட்டு முதல்தர கிரவல் போடப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106