வடக்கு மக்களின் கருத்தறிய கருத்துப் பெட்டி!
Sunday, April 3rd, 2016
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பான மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான முயற்சிகளில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான கருத்துப் பெட்டிகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இக்கருத்துப் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வீட்டுத் திட்டம் தொடர்பில் பல தரப்புகளிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இவ்வாலோசனையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கைக்கு வருகை தந்தார் பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர்!
|
|
|


