யாழில் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
Thursday, October 26th, 2017
யாழ். குடாநாட்டில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம் மக்களுக்கு அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், யாழ். முஸ்லீம் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு கோரியும் இன்று வியாழக்கிழமை(26) முற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
யாழ். முஸ்லீம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீடமைப்புத் திட்டத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய தடை ஏற்படுத்தப்படாது – சபாநாயகர்!
மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸார் வெளியேற வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவச...
|
|
|


