யாழ் மாவட்டத்தில் 325 ஹெக்டேயர் நிலப்பரப்பில் திராட்சைப் பழச் செய்கை!
Friday, October 14th, 2016
யாழ் மாவட்டத்தில் 325 ஹெக்டேயர் நிலப்பரப்பில் திராட்சைப் பழச் செய்கை இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இம்முறை பல விவசாயிகள் இப் பழச் செய்கையில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஒரு கிலோ திராட்சைப்பழம் 270 ரூபா முதல் 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒரு நாளைக்கு 40 கிலோ திராட்சைப் பழம் வரை அறுவடை செய்யக் கூடியதாகத் தெரிவித்த வலிகாமத்தைச் சேர்ந்த திராட்சைப் பழச் செய்கையாளரொருவர் இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா வரை வருமானமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளதாகவும் கூறினார்.
தற்போது கடும் வெயில் காலம் நிலவுவதால் யாழ். மாவட்டத்தில் திராட்சைப் பழத்திற்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Related posts:
பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை!
இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம்!
பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் - இராஜாங்க அமைச்சர் அரவிந்த் கு...
|
|
|


