மழையுடன் கூடிய காலநிலை –  செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!

Saturday, May 9th, 2026

யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் “கலி பவுசர்” மூலம் வெள்ள நீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று காலை ஆரம்பமானது.

அகழ்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், செம்மணி பகுதியில் திடீரென மதியம் மழை பொழிந்தமையால் , அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டன.

அத்துடன் புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீரும் தேங்க தொடங்கியது.

அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையின் கலி பவுசர்களை அழைத்து , அவற்றின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டன

இந்நிலையில் இன்றைய அகழ்வு பணிகளின் போது, ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் இரண்டு என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 260 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 256 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று (09)  12ஆம் நாள் அகழ்வு பணிகள் அரை நாட்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு இடையில் மழை குறுக்கிட்டால் , நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகளை தாற்காலிகமாக இடைநிறுத்தி ,  ஓரிரு கிழமைகளில் பின்னர் நீதிமன்று குறிப்பிடும் நாளொன்றில் மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106