பாடசாலை மாணவர்களுக்கும் , 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள் விற்ற தேநீர்ச் சாலையின் உரிமையாளர் கைது!
Friday, October 14th, 2016
பாடசாலை மாணவர்களுக்கும் , 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் யாழ்.பெருமாள் கோயில் பகுதியிலுள்ள தேநீர்ச் சாலையின் உரிமையாளரை யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை(13) கைது செய்துள்ளனர்.
மேற்படி பகுதியிலுள்ள தேநீர்ச் சாலையில் பாடசாலை மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள் விற்பனை செய்வதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியாகத் தகவல் கிடைக்கப் பெற்று வந்த நிலையிலேயே மேற்படி கடையினைச் சுற்றிவளைத்த அதிகாரிகள் நேற்று மேற்படி கடை உரிமையாளரைக் கைது செய்து விசாரணை நாடாத்தி வருகின்றனர்.

Related posts:
மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!
தனிமைப்படுத்தல் மையமாகும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி - அவசரமாக வெளியேறும் மாணவர்கள்!
உதவி சுங்க அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்களை இலங்கை சுங்க திணைக்களத்தால் கோரல்!
|
|
|


