விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Thursday, October 13th, 2016
யாழ்ப்பாணம், இருபாலைச் சந்தியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், இன்று (13) உயிரிழந்தார்.
கோப்பாய் தெற்கைச் சேர்ந்த நல்லலிங்கம் சுஜிந்தம் (வயது 30) என்பவரே உயிரிழந்தார். வீதியைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த காருடன் மோதியதில் படுகாயமடைந்த குறித்த நபர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மேலும் மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

Related posts:
சில்லறை வியாபாரிகளிடம் வற் வரி அறவிட முடிவு!
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உறுதியுடன் இருக்கின்றேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறு...
தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் – வலியுறுத்துகின்றார் முன்னாள் ஜனாதிபதி ம...
|
|
|


