தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் – வலியுறுத்துகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Monday, May 22nd, 2023

“தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில் –

“‘பேச்சு வெற்றியடைய வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்க வேண்டும். அதைவிடுத்து வேண்டாவெறுப்புடன் எதிரணியின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பேச்சு தோல்வியடையும் என்ற எண்ணத்துடன் தமிழ்க் கட்சியினர் பங்கேற்றால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் காலமும் பின்தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இரு மனநிலையுடன்தான் பேச்சுக்கு  வந்தார்கள். அந்தப் பேச்சுக்கள் துரதிர்ஷ்டவசமாக இடை நடுவில் நின்றுபோயின.

ஜனாதிபதியுடனான தற்போதைய பேச்சு வெற்றியளிக்க வேண்டும் என்பதுதான் ஆளும் கட்சியினராகிய எமது விருப்பம். இதற்கு எம்மாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106